ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்!
இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். நான் மனதார நேசித்து பூஜித்து வணங்கும் மகான் எனக்கு அவரின் இருப்பிடத்தை உணர்த்திய நாள். நமக்கு
ஐந்து புலன்களை இறைவன் அளித்தது, அவரை புலன் விசாரணை செய்வதரக்கல்ல புளகாங்கிதம் அடைவதற்கு என்று நன்கு அறிந்து கொண்டேன்.
இதை விளக்க ஒரு உண்மை சம்பவம்:
என் வீட்டில் உள்ளோர் அனைவரும் தீவிரமான ஷிர்டி சாய் பக்தர்கள். இதற்கு நான் என் தந்தைக்கே நன்றி கூற வேண்டும். சென்னையில் இருக்கும் வரை என் அப்பா ஒவ்வொரு வியாழன் அன்றும் 6 அடியில் அவரே மாலை கோர்த்து பாபாவிற்கு அணிவித்து அழகு பார்க்க எடுத்துசெல்வார். அது போல் எனது தாய் சித்தி மாமி அக்கா என்று அனைவரும் அவர்கள் அவர்கள் வழியில் அவரை வழிபட்டு வந்தனர்.
இது பல வருடங்களாக நடந்து வருகையில், என் தாயின் அலுவலகத்தில் பணி புரியும் நெருங்கிய தோழி ஒருவர், என் தாய்க்கு ஒரு புதிய வழிபாடு ஒன்றை பகிர்ந்து கொண்டார். வழிபாடு கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும் அதன் விளைவு மிகை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியை அளித்தது. இது தான் அந்த வழிபாடு. என் அம்மாவின் தோழி ஒரு டப்பாவில் வழிபாடு செய்த ஒரே ஒரு ரொட்டியை அதிலே வைத்து 24 FEB 2011 வியாழன் அன்று அளித்தார்கள். பூஜையின் விதி முறைப்படி என் தாயும் அதை வாங்கி எங்களுது இல்லத்தின் பூஜை அறையில் வைத்து ஒரு வாரம் அதில் TEA தூளும் எண்ணெய்யும் ஊற்றி விளக்கு ஏத்தி வழிபாடு செய்து வந்தார். வழிபாடு செய்யும் போது அந்த டப்பாவை திறந்து பார்க்க கூடாது. அடுத்த வியாழன் 3 MARCH 2011 அன்று ஒரு ரொட்டி இரண்டு ரொட்டியாக ஆன அதிசயம் என் தாய் என்னிடம் பகிர்ந்து கொண்டதும் புல்லரித்து போனேன்.
இது பிள்ளையார் பால் குடித்த கதை போல் இன்னொன்று என்று பலர் கருதலாம். படித்து பகுத்தறிவு பெற்றவர்கள் இதை நம்பலாமா என்று நீங்கள் கேட்கலாம். ஒரு பிரச்சனை தனக்கு வரும் போது தான் அதன் வலியும் வேதனையும் புரியும் என்று எல்லோரும் கூறுவார்கள். கண்ணுக்கு தெரியாத வலி என்றொன்று இருக்கிறது என்று நம்பும் போது, கண்ணுக்கு தெரிந்து நம்பிக்கையோடு வழிபட்டு அதற்கு பலனும் வெளிப்படையாக தெரிந்ததை ஏன் நம்ப மறுக்க வேண்டும். நீங்களும் இதே வழிபாடு தான் செய்ய வேண்டும், விளைவு என்னவென்று பார்க்க வேண்டும், என்பதற்காக நான் இந்த கதை கூறவில்லை. கடவுளிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் நம்பிக்கை வெய்யுங்கள் அதிசியங்கள் தானே நிகழும் என்பதை உணர்த்தவே இந்த கதை.
நான் சாயை வழிபடும் முதல் காரணம் அவரின் வாழ்க்கை நெறிகளை முன்னிட்டு தான். அவர் கூறும் இரண்டு வேதம் SHRADDHA SABURI (பொறுமை - நம்பிக்கை).
என் தாயின் மனதில் இருந்த குழந்தை போன்ற நம்பிக்கை ஒரு வாரம் வழிபட்ட பொறுமை சாய் அருள் அவருக்கு கிட்டியது. நான் மிகவும் நெஞ்சம் நெகிழ்ந்த தருணம் இது. அதை நினவு கொள்ளவே இந்த சம்பவத்தை எழுதிகிறேன். மற்றவர்கள் நம்புவதர்க்காகவோ இல்லை ஆராய்வதர்க்காகவோ அல்ல.
இதுவே எங்கள் வீட்டில் நிகழ்ந்த (இறை)யருள். ஓம் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்.
என் தாயின் மனதில் இருந்த குழந்தை போன்ற நம்பிக்கை ஒரு வாரம் வழிபட்ட பொறுமை சாய் அருள் அவருக்கு கிட்டியது. நான் மிகவும் நெஞ்சம் நெகிழ்ந்த தருணம் இது. அதை நினவு கொள்ளவே இந்த சம்பவத்தை எழுதிகிறேன். மற்றவர்கள் நம்புவதர்க்காகவோ இல்லை ஆராய்வதர்க்காகவோ அல்ல.
இதுவே எங்கள் வீட்டில் நிகழ்ந்த (இறை)யருள். ஓம் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்.
