Thursday, May 17, 2012

அன்னையர் தின வாழ்த்து - MAY 13, 2012 (SUNDAY)


MOM
LOVE YOU AMMA


Thursday, March 3, 2011

(இறை)யருள்

             
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்!                                           

இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். நான் மனதார நேசித்து பூஜித்து வணங்கும் மகான் எனக்கு அவரின் இருப்பிடத்தை உணர்த்திய நாள். நமக்கு
ஐந்து புலன்களை இறைவன் அளித்தது, அவரை புலன் விசாரணை செய்வதரக்கல்ல புளகாங்கிதம் அடைவதற்கு என்று நன்கு அறிந்து கொண்டேன்.

இதை விளக்க ஒரு உண்மை சம்பவம்:
என் வீட்டில் உள்ளோர் அனைவரும் தீவிரமான ஷிர்டி சாய் பக்தர்கள். இதற்கு நான் என் தந்தைக்கே நன்றி கூற வேண்டும். சென்னையில் இருக்கும் வரை என் அப்பா ஒவ்வொரு வியாழன் அன்றும் 6 அடியில் அவரே மாலை கோர்த்து பாபாவிற்கு அணிவித்து அழகு பார்க்க எடுத்துசெல்வார். அது போல் எனது தாய் சித்தி மாமி அக்கா என்று அனைவரும் அவர்கள் அவர்கள் வழியில் அவரை வழிபட்டு வந்தனர்.
இது பல வருடங்களாக நடந்து வருகையில், என் தாயின் அலுவலகத்தில் பணி புரியும் நெருங்கிய தோழி ஒருவர், என் தாய்க்கு ஒரு புதிய வழிபாடு ஒன்றை பகிர்ந்து கொண்டார். வழிபாடு கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும் அதன் விளைவு மிகை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியை அளித்தது. இது தான் அந்த வழிபாடு. என் அம்மாவின் தோழி ஒரு டப்பாவில் வழிபாடு செய்த ஒரே ஒரு ரொட்டியை அதிலே வைத்து 24 FEB 2011 வியாழன் அன்று அளித்தார்கள். பூஜையின் விதி முறைப்படி என் தாயும் அதை வாங்கி எங்களுது இல்லத்தின் பூஜை அறையில் வைத்து ஒரு வாரம் அதில் TEA தூளும் எண்ணெய்யும் ஊற்றி விளக்கு ஏத்தி வழிபாடு செய்து வந்தார். வழிபாடு செய்யும் போது அந்த டப்பாவை திறந்து பார்க்க கூடாது. அடுத்த வியாழன் 3 MARCH 2011 அன்று ஒரு ரொட்டி இரண்டு ரொட்டியாக ஆன அதிசயம் என் தாய் என்னிடம் பகிர்ந்து கொண்டதும் புல்லரித்து போனேன்.

இது பிள்ளையார் பால் குடித்த கதை போல் இன்னொன்று என்று பலர் கருதலாம். படித்து பகுத்தறிவு பெற்றவர்கள் இதை நம்பலாமா என்று நீங்கள் கேட்கலாம். ஒரு பிரச்சனை தனக்கு வரும் போது தான் அதன் வலியும் வேதனையும் புரியும் என்று எல்லோரும் கூறுவார்கள். கண்ணுக்கு தெரியாத வலி என்றொன்று இருக்கிறது என்று நம்பும் போது, கண்ணுக்கு தெரிந்து நம்பிக்கையோடு வழிபட்டு அதற்கு பலனும் வெளிப்படையாக தெரிந்ததை ஏன் நம்ப மறுக்க வேண்டும். நீங்களும் இதே வழிபாடு தான் செய்ய வேண்டும், விளைவு என்னவென்று பார்க்க வேண்டும், என்பதற்காக நான் இந்த கதை கூறவில்லை. கடவுளிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் நம்பிக்கை வெய்யுங்கள் அதிசியங்கள் தானே நிகழும் என்பதை உணர்த்தவே இந்த கதை.

நான் சாயை வழிபடும் முதல் காரணம் அவரின்  வாழ்க்கை நெறிகளை முன்னிட்டு தான். அவர் கூறும் இரண்டு வேதம் SHRADDHA SABURI (பொறுமை - நம்பிக்கை).

என் தாயின் மனதில் இருந்த குழந்தை போன்ற நம்பிக்கை ஒரு வாரம் வழிபட்ட பொறுமை சாய் அருள் அவருக்கு கிட்டியது. நான் மிகவும் நெஞ்சம் நெகிழ்ந்த  தருணம் இது. அதை நினவு கொள்ளவே இந்த சம்பவத்தை எழுதிகிறேன். மற்றவர்கள் நம்புவதர்க்காகவோ இல்லை ஆராய்வதர்க்காகவோ அல்ல.

இதுவே எங்கள் வீட்டில் நிகழ்ந்த (இறை)யருள். ஓம் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்.

Saturday, February 5, 2011

(பட்ட)தாரிகள்

நான் படித்து வாங்கிய பட்டமே
என்னை DEAL இல் விட்டது !

Wednesday, January 26, 2011

அவசர காதல் அபார மோதல்

நீ என் அருகில் இருந்தால் போதும் என் வாழ்வையே உனக்கு அளிக்கிறேன் என்றது காதல் காலம்,
உன் குரல் கேட்டால் மட்டும் போதும் அலுவலகம் என்னை அழைக்கிறது என்றது நாம் இன்று வாழும் அவசர காலம்!

காதல் என்பது பூ என்றார்கள்,
அதனால் காதலர்கள் சுலபமாக ஏந்தி கொண்டார்கள்!
திருமணம் என்பது பூக்கள் சேர்ந்த மாலை என்றார்கள்,
ஒரு நாள் சுமந்ததில் வலி தெரியவில்லை
தினம் சுமக்க, சுகமும் சுமை ஆனது!
                                                     
காதலென்னும் பூக்கள் வாட திருமண மாலை மெலிந்தது,
பூக்கள் உந்திர்ந்தால் மாலைக்கு அழகில்லை,
காதல் நீங்கினால் மணவாழ்க்கையில் இனிமை இல்லை!
நான் மீண்டும் மலர்ந்து பூவாக வருகிறேன்
எனக்கு மணம் இல்லை என்ற போதும் உன் மனம் என்னை ஏற்குமா???

- இப்படிக்கி வேகமான காதல்

குட்டி கவிதைகள்

 


துணிவு! <துணைவி!> பணிவு!
துணிவே துணை!
என்றது சுதந்தரதிற்காக போராடிய காலம்;
துணைவியே எனக்கு வினை!
என்றது கணவர்களின் போறாத காலம்!




புகைந்த நெஞ்சம் ~~~~
உன்னை முத்தமிட்டதற்காக என்னை உருக வைப்பாய் என எண்ணினேன்,
ஏன் என் சுவாச பையை கருக  வைத்தாய்!

- இப்படிக்கி புகைலையை கேட்க்கும் புற்று நோய்

Wednesday, December 22, 2010

STATE RANK வாங்கிட்டேன்

100 Trillion calculations/sec , ஹே .... அந்த  Supercomputer எனக்கும் வேணும் அப்டின்னு தானே நெனக்கறீங்க! யாரு Manufacturerன்னு தெரியுமா ... கொஞ்சம் யோசிங்க.. IBM? DELL? HP? SAMSUNG? ACER? தெரியலையா?? என்னங்க, இப்டி கை விட்டுடீங்க. உங்க அப்பா அம்மா தாங்க.

என்னடா இது, நமக்கு தெரியாம நம்ம அப்பா அம்மா எப்போ Computer Manufacturing ஆரம்பிச்சாங்க அப்டின்னு மொக்க தனமா யோசிக்காம கொஞ்சம் அந்த 100 Trillion calculations/secல அட்லீஸ்ட் ஒரு 100 bytes ஆவது use பண்ணுங்க..  கடுப்பா பாக்காதீங்க. புரியுது. அது நம்ம மூளைங்க.

இல்ல.. இத நான் நம்ப மாட்டேனு சொல்றவங்களுக்கு ஒரு சின்ன Proof ... ஒரு சின்ன விளையாட்டுன்னு வெச்சிக்கலாம். நான் ஒரு சில வார்த்தைகள்  சொன்ன ஒடனே உங்க மனசுல என்ன தோனுதுன்னு பாருங்க.

ரோஜா, ஸ்கூல், நண்பன், ஐஸ் கிரீம், காபி, எக்ஸாம், மழை, பார்க், காதல், தமிழ், சென்னை

யோசிச்சிங்களா....
எனக்கு என்ன தெரியுமா தோணுது. ரோஜாவுக்கு - காதல் ; ஸ்கூலுக்கு - நண்பன் ; ஐஸ் கிரீம்க்கு - மழை ;  எக்ஸாம்க்கு - காபி ; சென்னைக்கு - தமிழ்னு ஒன்னுக்கு ஒன்னு முடிச்சு போட தோனுச்சு... உங்களுக்கு??

மனுஷனோட மூளை ஒரே Sizeல இருந்தாலும் யோசிக்கிற விதம் வேறங்க. இது ஏங்க நம்ம அப்பா அம்மாக்கு புரிய மாட்டேன்குது.

அவனும் நீயும் ஒரே கிளாஸ் தானே, ஒரே புக் தானே படிக்கறீங்க, ஒரே எக்ஸாம் பேப்பர் தானே எழுதுறீங்க. அப்புறம் என் நீ எப்பவுமே லாஸ்ட் (LAST) மார்க்,  அவன் பிரஸ்ட் (FIRST) மார்க்குன்னு .. ஏன்தான் மூளையே இல்லாம கேள்வி கேக்கறாங்களோ.  உங்க பீலிங்க்ஸ் (FEELINGS) எனக்கு புரியுது... நீங்களும் இத செவ்வெனே விளக்கி அவங்களுக்கு ஒரு தெளிவு குடுங்க. அதையும் மீறி கேள்வி கேட்டாங்கன்னா... Look below for a punch description

"நானும் STATE RANK வாங்கிட்டேன்... ஆனா எந்த STATE ன்னு சொல்ல மாட்டேன் எத்தனாவது RANKன்னும் சொல்ல மாட்டேன்"

- இப்படிக்கு படிப்புல மக்கா இருந்தாலும் வாழ்க்கைய ஒரு கிக்கோடா (KICK) வெச்சிப்போர் சங்கம்

Tuesday, December 21, 2010

முதல் முத்தம்!

என்னடா தலைப்பே ஒரு மார்கமா இருக்குன்னு பாக்றீங்களா?? புரியுது.. இது நான் தமிழ்ல எழுதற முதல் கட்டுரை... ச ச... கதைன்னு வெச்சிப்போமா.. சரி.. நம்ம எல்லாரோட வாழ்க்கைல நடக்கற அனுபவம்னு வெச்சிக்கலாம்.  முதல் முத்தம் எப்டி செம்ம Thrilla இருக்குமோ அந்த மாதிரி தாங்க நம்ம வாழ்க்கைல நடக்கிற எல்லா அனுபவங்களுக்கும் நம்ம நன்றி சொல்லணும்...  ஏன்னா முதல் முதல் செய்ற எல்லா விஷயமுமே செம்ம THRILLங்க

நம்ம இந்த பூமிக்கு வந்தது நம்ம அப்பா அம்மாக்கு THRILLu!
நம்ம வளந்தப்புறம் அவங்க ஆகறது ரொம்ப ரொம்ப DULL ( இதெல்லாம் நமக்கு சகஜம்)
FIRST DAY SCHOOL THRILLu
L.K.G லையே முதல் முதலா girl friendஒ boy friendஒ கெடச்சா THRILLo THRILLu

முதல் தம்மு THRILLu
அத வீட்டுக்கு தெரியாம அடிக்கறது அத விட THRILLu (ஐயையோ... என்ன  தப்பா நெனக்காதீங்க எல்லாம் என் Husband கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிடது... ஹ்ம்ம்ம்... என்னக்கும் பசங்க Friends இருக்காங்க... இது அவங்க அனுபவம் தான்)

முதல் நாள் COLLEGE THRILLu 
முதல் MASS BUNK THRILLu
முதல் நாள் ஒரு பேக்கு PRINCIPAL கிட்ட மாற்றது  THRILLu 
FAKE அப்பா அம்மா கூட்டிட்டு வரது அபார THRILLu 
முதல் SEMESTER EXAM படிக்காமா போனா என்னா THRILLu
அதுக்கப்புறம் வர ரிசல்ட் (RESULT) பாத்து மனசு FULLஒ FULL
டிகிரி முடிக்க ARREAR எழுதறது கடுப்பான THRILLu ஆனா அதுவும் THRILLu தான்

முதல் மப்பு THRILLu
அத கண்டுபுடிச்சு அப்பா குடுக்குற அப்பு  THRILLu
முதல் HANGOVER THRILLu
முதல் காதல்   THRILLu
முதல் முத்தம் THRILLu (காதலுக்கு அப்புறம் முத்தம் வந்ததுல உங்களுக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே??)

இப்படி LIFEல FIRST TIME பண்றது எல்லாமே செம்ம THRILLங்க

TAKE A CHILL PILL AND ENJOY THE THRILL

இருக்கறது ஒரு வாழ்க்கை அதுல யாரையும் கஷ்ட படுத்தாம YOUTHஅ ENJOY பண்ணுங்க...  

முதல் முத்தம்! முதல் முயற்சி! எப்பவுமே வெற்றி தாங்க... NEXT MEET பண்றேன்